Published : 24 Jul 2020 06:28 AM
Last Updated : 24 Jul 2020 06:28 AM
மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களின் இசை, நடனம் ஆகிய மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பீர்கள்.
ரிஷபம்: நீண்டநாளாக எதிர்பார்த்த காத்திருந்த காரியம் நடைபெறும். வெளிநாட்டினரால் ஆதாயம் உண்டு. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு உண்டு.
மிதுனம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் தன்னடக்கத்தைக் கண்டு அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்: பிரபலங்களின் நட்பும், அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் தாராளமாக கிடைக்கும். இழுபறியான காரியங்கள் இனிமையாக முடியும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.
சிம்மம்: மன உளைச்சல், டென்ஷன், விரக்தி வந்துபோகும். முன்கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பிள்ளைகளின் உயர் கல்விக்கான செலவு திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.
கன்னி: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மனைவிவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும்.
விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பணவரவு திருப்தி தரும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள்.
மகரம்: எளிதில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
கும்பம்: தடைகள் உடைபடும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்: அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT