Published : 23 Jul 2020 06:44 AM
Last Updated : 23 Jul 2020 06:44 AM
மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மிதுனம்: பல வகையிலும் பண வரவு உண்டு. சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.. குடும்பத்தில் உள்ள வீண் விவாதங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.
கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
சிம்மம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசுவதை தவிர்த்து விடுங்கள்.
கன்னி: உறவினர், நண்பர்களுடன் எதிர்பாராது மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
விருச்சிகம்: பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில காரியங்களை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.
தனுசு: தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களால் நன்மை உண்டு.
மகரம்: முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.. குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியக் கூடும்.
கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். திடீர் பயணம் ஏற்படலாம்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT