Published : 19 Jul 2020 06:23 AM
Last Updated : 19 Jul 2020 06:23 AM
மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
ரிஷபம்: சொத்து பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்-. உடல் நலம் சீராகும்.
மிதுனம்: எதிர்மறை விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
கன்னி: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுப்பீர்கள்.
துலாம்: இழுபறியாக இருந்துவரும் பிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பணவரவு உணடு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நண்பர்கள் சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது.
தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
மகரம்: உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். வெளியூர் பயணம் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு.
கும்பம்: உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT