Published : 16 Jul 2020 07:00 AM
Last Updated : 16 Jul 2020 07:00 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதிய வர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். செலவை குறைத்து சேமிக்க திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண் டாம். குடும்பத்தினர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தில் நல்லவரை இழக்க நேரிடும்.

மிதுனம்: காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டு.

கடகம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சிலர் உங்களிடம் முக்கியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடன் தொகை வசூலாகும். எதையும் உற்சாகத்துடன் செய்யத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

துலாம்: வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை பிறக்கும். உங்களின் பலம், பல வீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயா ருடன் எதிர்பாராது மனத்தாங்கல் வரும். கடனைத் தீர்க்கும் வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

மீனம்: கம்பீரமாக பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x