Published : 07 Jul 2020 06:09 AM
Last Updated : 07 Jul 2020 06:09 AM
மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விலகியிருந்த உறவினர்கள் மீண்டும் வருவார்கள்.
ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் தொகை வசூலாகும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வார்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.
கடகம்: வர வேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். கலைப் பொருட்கள் சேரும்.
சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மனைவிவழி உறவினரால் நன்மை உண்டு.
கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பு ஆறுதல் தரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
துலாம்: அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த ஈகோ பிரச்சினை நீங்கும். சுப செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்: சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் பேச்சில் சாமர்த்தியம் வெளிப்படும். விஐபிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசு காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பணவரவு திருப்தி தரும்.
மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
கும்பம்: வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சனை அதிகமாகும். முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
மீனம்: நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT