Published : 05 Jul 2020 06:29 AM
Last Updated : 05 Jul 2020 06:29 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணம் ஏற்படும்.

மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்சாதனங்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் உயரும். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கலைப் பொருட்கள் சேரும்.

சிம்மம்: உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.. சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் மளமளவென்று முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

துலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்: சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். நண்பர்கள், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின் முடியும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும். அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x