Published : 03 Jul 2020 06:53 AM
Last Updated : 03 Jul 2020 06:53 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிடுவதால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம்: நெருங்கிய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: மனதில் இருந்துவந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிக்கு வரும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை நிலவும்.

கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீட்டின் அடிப்படைவசதிகளை மேம்படுத்துவீர்கள்.

துலாம்: அதிரடி திட்டங்களைத் தீட்டி வெற்றியும் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.

விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினரின் செயல்கள் எரிச்சலை ஏற்படுத்தும். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கும்பம்: சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும் உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: மனக்குழப்பம் விலகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x