Published : 29 Jun 2020 06:49 AM
Last Updated : 29 Jun 2020 06:49 AM
மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் உங்களை தேடிவந்து உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும்.
ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேச மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எனவே எதிலும் நிதானம் அவசியம். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: துடிப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். செலவுகள் அதிகரிக்கும். உதவுவதாக வாக்கு கொடுத்தவர் ஏமாற்றி விடுவார்.
விருச்சிகம்: செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நெருங்கிய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு, வாகனம் வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். இளைய சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். கனிவான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்ற திட்டமிடுவீர்கள்.
மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் ஆதரவு உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
கும்பம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. மற்றவர்களை குறைகூறுவதை நிறுத்தி அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள். சாலையை கடக்கும்போது, வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
மீனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT