Published : 25 Jun 2020 06:22 AM
Last Updated : 25 Jun 2020 06:22 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பப்படி அவர்களை வழிநடத்துவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மிதுனம்: சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உடல் நலம் சீராகும்.

சிம்மம்: வேலைகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். உறவினரால் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பீர்கள்.

கன்னி: வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படும். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டி வரும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவிவழி உறவினரால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். உங்களின் முயற்சிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர் வகையில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். விருந்தினர் வருகை உண்டு. இழுபறியாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x