Published : 23 Jun 2020 06:41 AM
Last Updated : 23 Jun 2020 06:41 AM
மேஷம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாய் வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும்.
ரிஷபம்: எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். மூத்த சகோதரி தக்கசமயத்தில் உதவுவார். நீண்ட காலக் கடனை பைசல் செய்ய முயற்சிப்பீர்கள்.
மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்: முன்கோபம் அடிக்கடி தலைகாட்டும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து வருத்தப்படுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.
சிம்மம்: நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்ன சின்ன தடைகள் வரக்கூடும்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம் பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். திடீர் பயணம் ஏற்படலாம்.
தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தி மீறி எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ யாருக்கும் தர வேண்டாம். செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.
மகரம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.
கும்பம்: வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வருவார்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனின் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்ய நண்பரை சந்தித்து பேசுவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT