Published : 22 Jun 2020 07:01 AM
Last Updated : 22 Jun 2020 07:01 AM
மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியாக திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம்: புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக் கும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்: எதிர்மறை விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். எந்த வேலையையும் பலமுறை யோசித்து செய்வது நல்லது.
கடகம்: காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
கன்னி: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணவரவு உண்டு.
துலாம்: இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பணப் பற்றாக்குறை ஏற்படும்.
தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சகோதர வகையில் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
மகரம்: உறவினர், நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்குப் பின் மனம்விட்டு பேசுவீர்கள். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
கும்பம்: உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தகாரியங்கள் தடங்கலின்றி நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.
மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT