Published : 20 Jun 2020 06:43 AM
Last Updated : 20 Jun 2020 06:43 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தந்தையாரின் உடல்நலம் சீராகும். வாகன வசதி பெருகும்.
ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். நண்பர்களால் அநாவசிய செலவு உண்டாகும்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பணப் பற்றாக்குறை உண்டாகும்.
கடகம்: நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணவரவு திருப்தி தரும்.
சிம்மம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.
கன்னி: குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். சாதுர்யமாகப் பேசி தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
துலாம்: வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி குறித்து யோசிப்பீர்கள். அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
விருச்சிகம்: முக்கியப் பிரமுகருடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார்.
தனுசு: உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரரின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
கும்பம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகத்தில் பிரபலமானவரின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
மீனம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT