Published : 17 Jun 2020 06:21 AM
Last Updated : 17 Jun 2020 06:21 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்.

ரிஷபம்: தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்காகவும். சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதமோ தர வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.

விருச்சிகம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.. புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள்.

மகரம்: வீட்டின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் எதிர்பாராமல் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்: சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x