Published : 13 Jun 2020 05:58 AM
Last Updated : 13 Jun 2020 05:58 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

மிதுனம்: முன்கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

சிம்மம்: புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடு படுவீர்கள். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

கன்னி: கனிவாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களை தவறாக நினைத்தவர்களின் மனம் மாறும். பயணம் ஏற்படும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப்பொருட்கள் சேரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

தனுசு: சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளை களால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். நட்பு வட்டம் விரியும்.

கும்பம்: மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர் கள் பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். மாலை முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் காட்டாதீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x