Published : 11 Jun 2020 06:20 AM
Last Updated : 11 Jun 2020 06:20 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

ரிஷபம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் திடீரென முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாகக் கூடும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு உண்டு.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். கடனைத் தீர்க்கும் வழியை யோசிப்பீர்கள்.

தனுசு: சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீ்ர்கள்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வரக் கூடும். யாரையும் மனம் நோகும்படி கடுஞ்சொற்களால் பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேசுவதை தவிருங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x