Published : 09 Jun 2020 06:10 AM
Last Updated : 09 Jun 2020 06:10 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

மிதுனம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். சிலர் உங்கள் மீது குறை கூறினாலும் அதை பெரிதுபடுத்தாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.

கடகம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, உத்தியோகம் குறித்து ஆலோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள்.

தனுசு: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மகரம்: மனம் அமைதியற்று காணப்படும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

கும்பம்: பண விஷயங்களில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.

மீனம்: உங்களின் முயற்சிக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடி வருவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x