Published : 03 May 2020 07:52 AM
Last Updated : 03 May 2020 07:52 AM
மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப்போன திருமண விஷயம் சிறப்பாக கூடி வரும். தாயாரின் ஆதரவு உண்டு. பண வரவு உண்டு.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பணவரவு திருப்தி தரும்.
கடகம்: எதிர்ப்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். பெரியோரின் ஆசி, ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டு. கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும்.
சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும். புதிய வாய்ப்புகளை தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத செலவு ஏற்படும்.
கன்னி: வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபோகும் யோகம் உண்டாகும்.
துலாம்: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மரியாதை உயரும்.. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
தனுசு: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருள் செலவு ஏற்படக்கூடும். வாகனம் திடீரென பழுதாகும். அக்கம்பக்கத்தினருடன் அளவுக்கு மீறி பழகுவது பிரச்சினையை ஏற்படுத்தும்.
கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். உங்களின் முயற்சிகளுக்கு தாயார் ஆதரவாக இருப்பார்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT