Published : 22 Apr 2020 08:31 AM
Last Updated : 22 Apr 2020 08:31 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணவரவு தாராளமாக இருக்கும். நீண்டகால கடனை பைசல் செய்வீர்கள். அடுத்தடுத்த சுபகாரியங்களால் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு.

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும்.

மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிட்டும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: பிற்பகல் முதல் வேலைச்சுமை, டென்ஷன், நண்பர்களுடன் எதிர்பாராத கருத்துமோதல் வரக்கூடும். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

துலாம்: மனதில் தன்னம்பிக்கை துளிர்விடும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்-. பிள்ளைகளின் தவறை சுட்டிக் காட்டி திருத்துவீர்கள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமையடைவீர்கள்.

தனுசு: நீண்ட காலமாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் தொடர்பு கொள்வார்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் வரும்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சமார்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கும்பம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். சுமுகமாகப் பேசி பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள். பணவரவு உண்டு.

மீனம்: புதியவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x