Published : 21 Apr 2020 08:39 AM
Last Updated : 21 Apr 2020 08:39 AM
மேஷம்: அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படக் கூடும். உங்களிடம் அடிக்கடி தலைகாட்டும் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடியும்.
ரிஷபம்: வீட்டின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் நிறைவேறும். சமூகத்தில் பிரபலமானவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சிம்மம்: வீண் அலைச்சல், பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் உண்டாகக் கூடும்.
கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். நீண்ட நாட்களாக மனவருத்தத்தில் இருந்த சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். விஐபிக்கு நெருக்கமாவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீ்ர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அளவுடன் பழகுவது பிரச்சினையை தவிர்க்கும்.
மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள்.
கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரியும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT