Published : 15 Apr 2020 07:47 AM
Last Updated : 15 Apr 2020 07:47 AM
மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவு களை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
ரிஷபம்: சாதுர்யமாக செயல்பட்டு சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பணவரவு திருப்தி தரும்.
கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம் பரச் செலவுகளை தவிர்த்து விடுவீர்கள்.
சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்ல நண்பர்களின் நட்பு கிட்டும்.
விருச்சிகம்: வெகுநாட்களாக நீடித்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனு சரித்து செல்வீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.
மகரம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்: ஆடம்பரமான செலவுகளை குறைப்பது நல்லது. மறைமுகப் போட்டியை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT