Published : 09 Apr 2020 08:30 AM
Last Updated : 09 Apr 2020 08:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைமுக எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்: வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.

கடகம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் பணத்தால் சமாளித்து விடுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.

சிம்மம்: மனதில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். கலகலப்பான சூழல் உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். பணவரவால் பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள்.

தனுசு: முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பணவரவு உண்டு.

கும்பம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வது குறித்து திட்டமிடுவீர்கள்.

மீனம்: மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x