Published : 03 Apr 2020 08:34 AM
Last Updated : 03 Apr 2020 08:34 AM
மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படக் கூடும். பழைய கடனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.
மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.
கடகம்: திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து அவ்வப்போது வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
சிம்மம்: எளிதில் முடியும் காரியங்கள்கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடப்பார்கள்.
கன்னி: பெற்றோர் உங்களின் புது முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதரர் வகையில் சுபச் செலவு உண்டு. ஆன்மிக பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.
தனுசு: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாயுக் கோளாறால் தொந்தரவுகள் ஏற்படக் கூடும். எனவே உணவு கட்டுப்பாடு அவசியம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
மகரம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலைகள் உடனுக்குடன் முடியும். சிலர் புது வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு .உண்டு.
கும்பம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கு விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.
மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். முன்கோபம் குறையும். விஐபிகளின் அறிமுகத்தால் சில காரியங்கள் நிறைவேறும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT