Published : 30 Mar 2020 08:24 AM
Last Updated : 30 Mar 2020 08:24 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

ரிஷபம்: கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்காதீர்கள்.

மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து அவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும்.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.. எதிர்மறை எண்ணம் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவிகள், ஆலோசனைகள் கிடைக்கும். வருமானம் உயரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்

துலாம்: வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பிள்ளைகளுடன் எதிர்பாராத வகையில் வாக்குவாதம் ஏற்படக் கூடும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம்.

விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். உங்களின் சகிப்புத் தன்மையை உறவினர்கள் பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகம் ஏற்படும்.

தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுக்கிடையே மனம்விட்டுப் பேசி முக்கிய பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள்.

மகரம்: புதிய திட்டங்கள் மளமளவென்று நிறைவேறும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்கள் செல்வதற்குத் திட்டமிடுவீர்கள்.

கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்

மீனம்: மகளுக்கு நல்ல இடத்தில் நினைத்த மாதிரி மாப்பிள்ளை அமையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். அநாவசிய செலவுகளை குறைப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x