Published : 30 Dec 2024 06:01 AM
Last Updated : 30 Dec 2024 06:01 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்ட வேலையை, உங்கள் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர் வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம்.

ரிஷபம்: திடீர் பயணம், அலைச்சல், அசதி, எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும். தாய் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் சுமுகமான சூழல் ஏற்படும்.

கடகம்: உங்களது நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அரசு காரியங்கள் நல்லபடியாக முடியும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. வியாபாரத் தில் வாராக்கடன் வந்துசேரும்.

துலாம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவல கத்தில் வீண் விவாதம் ஏற்பட்டு விலகும்.

தனுசு: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் சற்று தடைபடும். பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள். வாகன பயணத்தில் அலட்சியம் கூடாது.

மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்ப்பீர்கள். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும்.

கும்பம்: வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடா கும். ஆன்மிக பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவதால் வீடு களை கட்டும். கலைப் பொருட்கள் சேரும்.

மீனம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x