Published : 27 Dec 2024 05:45 AM
Last Updated : 27 Dec 2024 05:45 AM
மேஷம்: பிள்ளைகளால் விரயச் செலவுகள் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.
ரிஷபம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
மிதுனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் சிலருக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
சிம்மம்: புது யோசனைகளால் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வீட்டில் அழகான பொருட்கள் சேரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும். வியாபாரம் நல்ல லாபம் தரும்.
கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும்விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: திட்டமிட்டு சில வேலைகளை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்துமோதல்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூட வேண்டாம். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
தனுசு: முகத்தில் தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. புண்ணிய தலங்கள் செல்வீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.
மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புது ஆடை, ஆபரணங்களில் மனம் லயிக்கும். அலுவலகத்தில் முக்கிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும்.
கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: மனக்குழப்பம் நீங்கும். புதியவர் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT