Published : 23 Dec 2024 05:38 AM
Last Updated : 23 Dec 2024 05:38 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இனி அடிக்கடி வாகனத்துக்காக செலவு செய்யாமல் வாகனத்தை மாற்றுவீர்கள்.

ரிஷபம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடப்பார்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் இருந்த பழுது நீங்கும்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: நெருங்கிய சொந்த பந்தங்களால் திடீர் பயணம், அலைச்சல், அசதி, வீண் செலவுகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் தோன்றி மறையும். ஆன்மிக நாட்டம் கூடும்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புதிய வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் குறையும். வியாபாரத் தில் போட்டிகள் மறையும்.

மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால், அனு கூலம் உண்டு. வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வெளியூர் பயணம் உற்சாகம் தரும்.

கும்பம்: எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். வீண் செலவை கட்டுப்படுத்துங்கள். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை கூடும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

மீனம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப் பார்கள். அரசு வேலைகள் முடிவுக்கு வரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x