Published : 09 Dec 2024 05:15 AM
Last Updated : 09 Dec 2024 05:15 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது உத்தி களை கையாள்வீர்கள்.

ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

மிதுனம்: பிரபலங்களின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிக நாட் டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாளர்களை மாற்றுவீர்கள்.

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

சிம்மம்: பணம், நகை, ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: நீண்டகால பிரச்சினையில் இருந்து விடுபட, மாற்றுவழி காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதிய பதவி, பொறுப்புகள் தேடிவரும்.

விருச்சிகம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகன பழுது நீங்கும். தொழில் ரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண் செலவை குறைத்து, சேமிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த அரசு, வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓயும்.

கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். முன்கோபம், காரியத் தடைகள் வரக்கூடும். பிள்ளை களின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x