Published : 02 Dec 2024 05:37 AM
Last Updated : 02 Dec 2024 05:37 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வாகன பழுது நீங்கும்.

ரிஷபம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படவும். குடும்பத்தில் மூத்தோர் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும்.

மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி, மகிழ்ச்சி உண்டு.

கடகம்: தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப் பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்து, முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பேச்சில் பொறுமை தேவை.

கன்னி: அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. வாயு கோளாறால் நெஞ்சுவலி வந்து நீங்கும். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.

துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்: வெளியூர் பயணத்தால் அலைச்சல், அசதி இருக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். திடீர் செலவுகள் வரும். மாலைப்பொழுதில் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

தனுசு: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை. தொழில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள்.

மகரம்: சொந்த ஊரில் மரியாதை, அந்தஸ்து அதி கரிக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். சகோதர உறவு களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பங்கு சந்தை, கமிஷன் வகையில் அனுகூலம் உண்டு.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாளர்களின் ஆதரவு உண்டு.

மீனம்: வெளி வட்டாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகன பழுது நீங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x