Published : 25 Nov 2024 05:38 AM
Last Updated : 25 Nov 2024 05:38 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால், தடைபட்டிருந்த வேலையை முடிப்பீர்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர் வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம்.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான வீட்டு உபயோக பொருட்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. பழைய கடன் பாக்கிகள் கைக்கு வரும்.

கடகம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகன கடனுதவி கிடைக்கும். அரசு, வங்கி காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கன்னி: திடீர் பயணம், உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் நிதானமாக முடிவெடுப்பது அவசியம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.

துலாம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் நிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் விலகும்.

தனுசு: வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங் கள் தேடி வருவார்கள். பொது காரியங்களில் ஈடுபட்டு, பாராட்டு பெறுவீர்கள்.

மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கும்பம்: வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த உதவி, வாய்ப்புகள் தடைபடும். குடும்பத்தில் யாருடனும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பயணத்தால் அசதியுடன், அனுகூலமும் உண்டு.

மீனம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியாக இருந்த திருமண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x