Published : 23 Oct 2024 05:40 AM
Last Updated : 23 Oct 2024 05:40 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: செலவுகள் குறையும். சவாலான காரியங்களை எடுத்து முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: பழைய உறவினர், நண்பர்களின் வருகையால் கையிருப்பு கரையக் கூடும். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: முகத்தில் தெளிவு பிறக்கும். சில வேலைகளை முடித்துவிட்டோம் என மன நிம்மதியுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீர். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்கள்.

துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். உடன் பிறந்தவர்கள் பண உதவி செய்வர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.

விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர்.

தனுசு: குடும்பத்தாருடன் வீண் விவாதங்கள் வரக் கூடும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் தொந்தரவு உண்டு. அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரும்.

மகரம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: எதிர்பார்த்து கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். அலுவலகத்தில் உங்கள் தரம் ஒருபடி உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். சொந்த ஊரில் மதிப்புயரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x