Published : 20 Oct 2024 05:43 AM
Last Updated : 20 Oct 2024 05:43 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர், கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: அவசர முடிவுகள் வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து போகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் போட்டி குறையும்.

கடகம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் மறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

துலாம்: எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வயிற்று வலிபோன்ற உபாதைகள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை முற்றிலும் தவிர்த்துவிடவும்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வியாபார ரீதியாக சில மாற்றங்களை செய்வீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மீனம்: பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர், பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x