Published : 19 Oct 2024 05:35 AM
Last Updated : 19 Oct 2024 05:35 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக் கூடும். தெளிவாக யோசனை செய்து பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷபம்: வெளிப்படையாக பேசி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

மிதுனம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பிதருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கடகம்: மனதில் இருந்த வீண் பயம் விலகும். திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

சிம்மம்: புதிய எண்ணங்கள் மனதில் உதிக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவு தருவார். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கன்னி: குழப்பம் நீங்கி மன மகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசுவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

துலாம்: வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் இருக்கும். எதிலும் கவனம் அவசியம்.

விருச்சிகம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து தீவிரமாக யோசிப்பீர். பிரியமானவர்களுடன் சந்திப்பு நிகழும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சிறக்கும்.

மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x