Published : 18 Oct 2024 05:39 AM
Last Updated : 18 Oct 2024 05:39 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணம் அலைச்சல் தரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் தொல்லை தருவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க தாமதமாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் நிலவி வந்த விவாதம் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீர். தொழில் போட்டி குறையும்.

கடகம்: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை தென்படும். புதியவர்கள் நண்பர்களாவர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவர். உத்தியோகம் மேன்மை தரும்.

கன்னி: குழப்பங்கள், அலைச்சல் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். முடிவுகள் எடுக்கும்போது நிதானம் தேவை. அலுவலகத்தில் நீண்ட நாட்களாக தேடிய ஆவணம் கிடைக்கும். மேலதிகாரி ஆதரிப்பார்.

துலாம்: விருந்தினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் லாபம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: மனப் போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். பணவரவு உண்டு. வியாபாரத்தில் போட்டி நீங்கும். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனே நிறைவேறும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மீனம்: பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். புது எண்ணங்கள் மனதில் தோன்றும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x