Published : 15 Oct 2024 05:45 AM
Last Updated : 15 Oct 2024 05:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

சிம்மம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங் கள். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்காதீர்கள். அலுவலகத்தில் முன்கோபம் வேண்டாம்.

கன்னி: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்களெல்லாம் ஓடி வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

துலாம்: கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிட்டும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். பணியாளர்களின் ஆதரவுண்டு. உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு காரியம் முடியும். புதிய வேலை அமையும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் மேன்மையுண்டு.

கும்பம்: மனக் குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள் முதல் செய்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அரசால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x