Published : 14 Oct 2024 05:11 AM
Last Updated : 14 Oct 2024 05:11 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும் பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

ரிஷபம்: மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் இருந்த பழுது நீங்கும்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள் வரும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணத்தால் அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம்: எதிர்பாராத பண வரவால், பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல், அசதி விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் மறையும். வியா பாரத்தில் போட்டிகள் குறையும்.

மகரம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழி லில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டு.

கும்பம்: எந்த விஷயத்திலும் அவசர முடிவு எடுக்க வேண் டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வியா பாரத்தில் போட்டி இருக்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.

மீனம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப் பீர்கள். வங்கி கடனுதவிகள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வெளியூர் பயணங்கள் உற்சாகம் தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x