Published : 06 Oct 2024 05:43 AM
Last Updated : 06 Oct 2024 05:43 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தினரால் விரயச் செலவு இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் நிதான மாக செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம் சூடுபிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சிறக்கும்.

கடகம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். முடியாமல் போன சில காரியங்களை முடிப்பீர். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். தம்பதிக்குள் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: தம்பதிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்து போகவும். பிள்ளைகளிடமிருந்த மனக் கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: திட்டமிட்ட வேலைகளை முடிக்க போராடுவீர். உடல்நலக்குறைவு, மனச்சோர்வு வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. சரக்குகள் அனைத்தும் விற்றுத்தீரும்.

தனுசு: இல்லத்தில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடிவரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயார், பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். உத்தியோகத்தில் எதிர்பாராத உயர்வு உண்டு.

மீனம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு, வியாபாரம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x