Published : 04 Oct 2024 05:08 AM
Last Updated : 04 Oct 2024 05:08 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்: இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து லாபமுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மிதுனம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். பழைய கடனை பைசல் செய்வீர். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிட்டும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: அடிமனதிலிருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

துலாம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் கருத்து மோதல் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும்.

விருச்சிகம்: புது யோசனை தந்து சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வீட்டில் அழகான பொருட்கள் சேரும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். புண்ணிய தலங்கள் சென்று வருவீர். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு. வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும். மதிப்பு உயரும்.

கும்பம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் விரயச் செலவுகள் வரக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம். பிறரை பற்றி குறை கூறுவதை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x