Published : 01 Oct 2024 05:06 AM
Last Updated : 01 Oct 2024 05:06 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்கு பிறகு சில நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். தாயாரின் உடல்நலம் சீராகும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும்.அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

மிதுனம்: வருமென எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். புதிய பதவி கிடைக்கும்.

சிம்மம்: குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் நீங்கள் தேடிய ஆவணம் கிடைக்கும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

துலாம்: குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அலுவலகத்தில் புது பொறுப்பு ஏற்பீர். புதிய பங்குதாரர் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். அலுவலகத்தில் சக ஊழியருடன் இணைந்து செயல்படவும். வியாபாரத்தில் புது யுக்திகளை கடைபிடிப்பீர்.

தனுசு: வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகவாவர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் எளிதில் முடித்துவிடுவீர்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்கள் அன்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கும்பம்: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எனினும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டு.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிப்பீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x