Published : 23 Sep 2024 05:15 AM
Last Updated : 23 Sep 2024 05:15 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய நண்பர்கள் மூலம் உதவி உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்று வீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

ரிஷபம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துகொள்வார்கள். எனவே, பேச்சில் பொறுமை தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: முக்கிய தேவைக்காக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக் கியத்துவம் தருவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர் களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

கன்னி: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பல வகையிலும் பணப் புழக்கம் உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் அமைதி நிலவும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடல்சோர்வு, வயிற்று பிரச்சினை வந்து நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகத்தால், ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு, அந்தஸ்து உயரும்.

தனுசு: தடுமாற்றம் நீங்கும். எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்துகளை மாற்றி அமைப்பீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும்.

மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர் கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் திருப்தி தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x