Published : 13 Aug 2024 04:10 AM
Last Updated : 13 Aug 2024 04:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பேச்சில் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். விவாதம் வேண்டாம்.

ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் லாபமுண்டு.

மிதுனம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: மனதில் இருந்த பயம் விலகும். திடீர் பண வரவு உண்டு. வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் சூடு பிடிக்கும். பிரபலமான இடத்தில் புதிய கடை திறப்பீர்.

சிம்மம்: உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி: பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

துலாம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் மதிப்புயரும்.

விருச்சிகம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக் கூடும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போகவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x