Published : 06 Aug 2024 04:10 AM
Last Updated : 06 Aug 2024 04:10 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களது மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: கைமாற்றாக, கடனாக வாங்கிய பணத்தை ஒருவழி யாக தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் அதிகாரி கள், சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை.

கன்னி: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களால் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

துலாம்: விலகி சென்ற உறவினர் வலியவந்து பேசுவார். சில நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். குடும்பத்துடன் சென்று, குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: நெடுநாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பல வகையிலும் லாபம் கூடும். அலுவலகத்தில் சுமுகமான சூழல் உருவாகும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர்கள்.

மகரம்: உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். அலுவலகத்தில் புதிய பதவி, பொறுப்புகள் தேடிவரும்.

கும்பம்: தவிர்க்க முடியாத செலவுகள், திடீர் பயணங்கள், அலைச்சல், அசதி இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். நாடி வந்தவருக்கு, இயன்ற உதவியை செய்வீர்கள்.

மீனம்: குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். பேச்சில் நிதானம் தேவை. தொழில், வியாபாரத்தில் போராட்டம் இருந்தாலும், தைரியமாக சமாளிப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x