Published : 26 Jul 2024 04:08 AM
Last Updated : 26 Jul 2024 04:08 AM
மேஷம்: சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் செல்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கௌரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். புதிய தொழில் தொடங்குவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
கடகம்: அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
சிம்மம்: காரிய தடைகள், அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கையிருப்புகள் கரையும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். அலுவலகரீதியான பயணம் புத்துணர்ச்சி தரும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு.
விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.
மகரம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: பழைய நல்ல நினைவுகளை அவ்வப்போது நினைத்து அசைபோடுவீர். சுற்றியிருப்பவர்கள் அன்பாக இருப்பர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
மீனம்: உடல்சோர்வு, அலைச்சல் வந்து போகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment