Published : 25 Jul 2024 04:06 AM
Last Updated : 25 Jul 2024 04:06 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

மிதுனம்: இல்லத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

கடகம்: வெளியூரிலிருந்து விருந்தினர் வருகை உண்டு. பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

சிம்மம்: யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில காரியங்களை போராடி முடிப்பீர். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பர். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்களின் வருகை உண்டு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும்.

மீனம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். அண்டை, அயலார்சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் நிதானம் தேவை.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x