Published : 17 Jul 2024 05:04 AM
Last Updated : 17 Jul 2024 05:04 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றமுண்டு.

ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கடகம்: மறைமுக எதிர்ப்பு விலகும். உங்கள் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். பணவரவு உண்டு.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரம், அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி, சக ஊழியரின் ஆதரவுண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கையிருப்பு கரையக் கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

தனுசு: பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய பங்குதார்களின் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பதவி கிடைத்து அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்துக்காக வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x