Published : 15 Jul 2024 05:05 AM
Last Updated : 15 Jul 2024 05:05 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும். வாகனப் பழுது நீங்கும்.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும்.

மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர்கள்.

கடகம்: வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை திறமையாக சமாளிப்பீர்கள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி: உத்தியோகத்தில் வேலைச் சுமை இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. வாயு கோளாறால் உடல் உபாதை தோன்றி மறையும். உணவு கட்டுப்பாடு அவசியம். ஆன்மிக நாட்டம் கூடும்.

துலாம்: திடீர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும். எடுத்த வேலை முடியவில்லையே என பதற்றத்துடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயரை பரிந்துரை செய்வார்கள். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிடைக்கும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பெற்றோரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும். கவுரவ பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகையில் ஆதாயம் உண்டு.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு, பணம் புரளும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்கள் ஆதரவு உண்டு.

மீனம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுங்கள். குடும்பத்தில் மூத்தோர் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. வாகன பயணத்தின்போது கவனம் தேவை. வியாபாரத்தில் திடீரென சரக்குகள் தேங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x