Published : 11 Jul 2024 05:04 AM
Last Updated : 11 Jul 2024 05:04 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண்பழி அகலும்.

மிதுனம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் மென்மை உண்டு.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மாணவர்கள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். அலுவலகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். வியாபாரத்தில் லாபம் உண்டு.

சிம்மம்: திடீர் பயணங்கள் அலைச்சல் தரும். எடுத்த வேலையை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அந்தஸ்து உயரும்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பணம் புரளும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பிரச்சினை விலகும்.

துலாம்: பூர்வீக ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். பணவரவு திருப்தி தரும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும்.

தனுசு: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மகரம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்து குழப்பங்கள் விலகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: பேச்சில் நிதானம் தேவை. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும். வெளியூர் பயணம் ஏற்படும்.

மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x