Published : 10 Jul 2024 05:03 AM
Last Updated : 10 Jul 2024 05:03 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனைவி, தாயாரின் மருத்துவ செலவு குறையும். சகோதரர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி விலகும்.

மிதுனம்: விலை உயர்ந்த கலை பொருட்கள் வாங்குவீர். மனைவிக்கு ஆடை ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபம் ஈட்டுவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: வீண் அலைச்சல், டென்ஷன் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

கன்னி: இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழையபாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.

துலாம்: புது சிந்தனையால் மனக் குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். பூர்வீக சொத்து தொடர்பாக குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர்கள்.

தனுசு: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மூத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் மனக் கசப்புகள் வரக் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களை சேர்க்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபம் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்.

மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்கள். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x