Published : 08 Jul 2024 04:45 AM
Last Updated : 08 Jul 2024 04:45 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி பழுதாகி செலவு வைத்த வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள்.

ரிஷபம்: மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். வெகுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து
நடப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார் கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

கடகம்: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் தோன்றி மறையும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் வேலைச் சுமை கூடும்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புதிய வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப் பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.

மகரம்: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

கும்பம்: வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வங்கி கடனுதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். வெளியூர் பயணங்கள் உற்சாகம் தரும்.

மீனம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x