Published : 07 Jun 2024 05:24 AM
Last Updated : 07 Jun 2024 05:24 AM
பொதுப்பலன்: காடு, கழனி திருத்த, வீடு, மனை விரிவுபடுத்த, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, வழக்கு தொடர, ரகசிய ஆலோசனை நடத்த நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பான மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்களின் சேமிப்பு மேலும் அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மிதுனம்: சொந்த - பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலைச் சுற்றல், வயிற்று வலி வரக் கூடும். தொழிலில் திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: மனக்குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். பங்குதாரர்களின் ஆதரவு கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலக மேலதிகாரி பாராட்டுவார்.
துலாம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களை ஆலோசித்து முடிவு எடுக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
தனுசு: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மகரம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர். புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகம் சார்ந்த விஷயங்களில் அமைதி காக்கவும்.
கும்பம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.
மீனம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment