Published : 02 Jun 2024 05:28 AM
Last Updated : 02 Jun 2024 05:28 AM
பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், மாங்கல்யம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, வியாபாரம் தொடங்க, வாகனம் வாங்க, யோகா, ஜோதிடம் பயில, நல்ல நாள்.
சூரிய நமஸ்காரம் செய்வது அதிக நன்மைகளைத் தரும். துர்கை, காளி, மாரியம்மனுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தீபம் ஏற்றினால் நோய்கள் குணமாகும். சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம் படித்தால் சோர்வு நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.
மேஷம்: மனக்குழப்பம் நீங்கி எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். யோகா, ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய பிரமுகர்களின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்கள் அன்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மரியாதை கூடும். மேலதிகாரி பாராட்டுவார்.
கடகம்: புதுப்புது யோசனைகள் தந்து உங்களைச் சுற்றி இருப்பவர்களை ஆச்சரியப்படுத்துவீர். பாதியில் நின்ற வேலை முடியும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
சிம்மம்: அலைந்து திரிந்து சில வேலைகளை முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதியுண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் இருக்கும்.
கன்னி: திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டு.
துலாம்: முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். ஆடை, ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்: மனப்போராட்டம் விலகும். திட்டமிட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள்.
தனுசு: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வாகனத்தை மாற்றுவீர். வழக்குகள் சாதகமாகும். பங்குதாரர் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மகரம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பணவரவு திருப்தி தரும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பிறருடன் உங்களை ஒப்பிடுவதை தவிர்க்கவும்.
கும்பம்: பணவரவு அதிகரித்து பழைய கடனை பைசல் செய்வீர் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: வீண் செலவுகளை குறைத்து சேமிக்க முயற்சி செய்யவும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதியுண்டு. முன்கோபம் அதிகரிக்கும். வாகனத்தை கவனமாக இயக்கவும். வியாபாரத்தில் பாக்கி தொகையை போராடி வசூலிப்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment